அரேபியர்கள் அனுப்ப இருக்கும் செவ்வாய் கிரகத்திற்கான விண்கலம்

credit: space.com

ஐக்கிய அரபு எமிரேட்:

யு ஏ ஈ என்று அழைக்கப்பட கூடிய (யுனைடட் அரப் எமிரேட்) நாட்டிலிருந்து தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இதில் கூறப்பட்டதாவது “ஹோப்” “Hope” நம்பிக்கை என்று பெயரிடப்பட்ட ஒரு விண்கலத்தினை செவ்வாய் கிரகத்தின் வட்ட பாதையில் 2021 ஆம் ஆண்டில் நிலைநிறுத்த போவதாக கூறியிருந்தனர்.

இதனை Emirates Mars Mission என்று பெயரிட்டுள்ளனர்.


முதல் நாடு:

ஒரு காலத்தில் அரபு இஸ்லாமியர்கள் கணிதத்திலும் வானியலிலும் முன்னோடியாக இருந்தார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆனால் இப்போது வானியல் ஆராய்ச்சியில் இஸ்லாமிய நாடுகள் ஏதும் ஆர்வம் காட்டுவதாக இல்லை . எனினும் இந்த செவ்வாய் கிரக விண்கலத்தினை முதன் முதலில் எமிரேட் தயாரிப்பதால்,

அரபு இஸ்லாமிய நாடுகளிளேயே எமிரேட் தான் முதன் முதலாக செவ்வாய் கிரகத்திற்கு அதாவது இண்டர் பிளானிடரி மிஷன், அனுப்பும் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.


2014 ஆம் ஆண்டு:

UAE Hope Planning Mission Mars

அப்போது எமிரேட்டின் தலைவராக இருந்த “ஷேக் கலிஃபா பின் சைது அல் நஹ்யான்” என்பவர் 2014 கூறும் போது, தங்களின் நாட்டிலிருந்து செவ்வாய் கிரகத்திற்கு ஒரு விண்கலம் நாங்கள் அனுப்புவோம். அதுவும் 2020 ல் என்று குறிப்பிட்டு இருந்தார்.


பூமியும் செவ்வாயும்

அவர் ஏதேச்சையாக 2020 என்று கூறினாரா இல்லை உண்மையில் தெரிந்து சொன்னாரா என்று தெரியவில்லை. ஆனால் நமது பூமியும் – செவ்வாயும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறைதான் மிகவும் அருகில் வரும் இதனை “Mars Opposition” என்று அழைப்பர். அந்த நாள் 2020 ஜூலை மாதம் வருகிறது. இதனால் . எமிரேட்டில் உள்ள அறிவியல் அறிஞ்சர்கள் 2020 ஜூலைக்குள் இந்த “நம்பிக்கை விண்கலத்தினை ” தயார் செய்ய வேண்டும்.


ஐம்பதாவது ஆண்டு விழா:

2020 ஜூலையில் விண்ணில் செலுத்தப்படும் HOPE விண்கலமானது 7 மாத பயனத்திற்கு பிறகு 2021 ஆரம்ப கட்டத்தில் செவ்வாயை அடையும் அந்த ஆண்டுதான். எமிரேட் எனும் நாடு உருவாகி ஐம்பதாவது ஆண்டு விழா என்பதும் ஒரு குறிப்பிடத்தகுந்த நிகழ்வு.


சொந்தமாக தயாரிக்கும்:

சாதாரணமாக சொல்லப்போனால் அரபுநாடுகள் பணக்கார நாடுகள் என்று எல்லாரும் சொல்லுவார்கள், அவர்கள் நினைத்தால் ஜப்பானிலிருந்து சிறந்த டெக்னாலஜி மெஷின் களை வாங்க முடியும். அமெரிகாவிலிருந்து சிறந்த விண்கல பாகங்களை வாங்க முடியும், இந்தியாவிலிருந்து சிறந்த அறிவியலாலர்களை சம்பளம் கொடுத்து வேலை அமர்த்த முடியும் . ஆனால் இதையெல்லாம் அவரகள் செய்யாமல் . இந்த தொழில் நுட்பம் தங்கள் நாட்டிலேயெ தயாரிக்கவேண்டும் என்ற என்னத்தோடு. முழுக்க முழுக்க உள்நாட்டு அறிவியலாலர்களை கொண்டு தயாரிக்கபடுகிறது. இது மிகவும் பாராட்டுக்குறிய விஷயம்.


நம்பிக்கை HOPE

இந்த விண்கலம் சுமார் சிறிய ரக கார் போன்ற எடையும் அளவும் கொண்டது. விண்கல்த்தின் எடை (எரிபொருளுடன் சேர்த்து) 1.5டன். இது ஒரு ஆளில்லா விண்கலம். இதன் முக்கிய நோக்கம் செவ்வாயின் வளிமண்டலத்தினை பற்றிய பல அதிகப்படியான தகவல்களை தருவது.

அதுமட்டும் இல்லாமல் செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் காலநிலை மாற்றங்கள் பற்றியும் இது ஆராயும் என்று கூறியுள்ளனர்.
200 ஆராய்ச்சி கழகங்கள்

இந்த விண்கலம் 2021 ல் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டபின் அதன் மூலம் கிடைக்கப்பெறும் தகவல்கள். உலகம் முழுவதும் உள்ள 200 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கழகங்கள் மற்றும் பல்கலைகழகங்களுக்கு பகிரப்படும் என்று பெருந்தன்மையாக கூறியுள்ளனர்.


Post a Comment

Previous Post Next Post