இஸ்ரோவின் புதிய கிளை நிறுவனம் | NSIL - New Space India Limited Details in Tamil

இந்தியாவின் விண்வெளி அமைப்பு “இஸ்ரோ” என அனைவருக்கும் தெரியும். இந்த இஸ்ரோவானது அயல் நாட்டு செயற்கைகோள்களை குறிப்பிட்ட தொகைக்கு வின்னில் ஏவி கொடுக்கும் ஒரு “Rocket Launch Providing Company” ராக்கெட் கம்பெனியாகதான் இருந்தது.

பிறகு நாம் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற மற்ற ஆராய்சி மற்றும் மேம்பாடு (R&D) சம்பந்தப்பட்ட துறைகளிலும் கால்பதிக்க ஆரம்பித்தோம். முதன் முதலில் “பாஸ்கரா” ஆரியபட்டா” போன்ற செயற்கைகோள்களின் தொடங்கி “Astrosat” IRNSS , சந்திரயான் 1 போன்ற பல திட்டங்களில் வேலைகளை தொடங்கி வெற்றிகரமாக செய்து முடித்தோம்.

மேலே சென்ன இந்த Astrosat ஒரு விண்வெளி தொலைநோக்கி ,மிகவும் சிறப்பான ஒரு தொலைநோக்கி. மற்றும் IRNSS என்பது GPS செயற்க்கைகோள்களுக்கு நிகரானது. சந்திரயான் 1 பற்றி நான் உங்களுக்கு சொல்ல தேவையில்லை, உங்களுக்கே தெரிந்திருக்கும். இது போன்று இஸ்ரோவின் ஆராய்ச்சி பணிகள் உலக அளவில் பயன் அளிப்பதாக இருந்து வந்தது.

அதே போன்று நாம் மேலே சென்னது போல். மற்ற வெளி நாட்டு செயற்கைகோள்கலையும் நாம் விண்ணில் ஏவி, நாட்டிற்கும் , இஸ்ரோ தனது அமைப்பிற்கும் தேவையான வருமானத்தினை ஈட்டி கொண்டது.

இதன் அடுத்த கட்ட நடவடிகையாக. NSIL – New Space India Limited என்ற ஒரு இஸ்ரோவின் கிளை நிறுவனம் இந்த ஆண்டு மார்ச் 16 ஆம் நாம் துவங்கப்பட்டது.

இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், இஸ்ரோவின் வளர்ச்சி மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட செயல்களை முழுக்க முழுக்க வருமானம் ஈட்டும் முனைப்புடன் அனுகுவது
 

NSIL is to commercially exploit the research and development work of Indian Space Research Organisation (ISRO) 

இந்த அமைப்பு துவங்கப்பட்டதன் விளைவாக , இஸ்ரோ செய்து வந்த வணிக ரீதியான ராக்கெட் ஏவுதல் தொடர்பான அனைத்து முடிவுகளையும் இனி இந்த NSIL என்ற புதிய அமைப்பு தான் பார்த்துக்கொள்ளும் என்றும், இஸ்ரோ தனது அடுத்தகட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட திட்டங்களில் முழு கவனமும் செலுத்தும் என்றும் மாற்றப்பட்டது.

இதனால் இஸ்ரோவுக்கு அடுத்த வரக்கூடிய ஆக்கப்பூர்வமான திட்டங்களில் முழுகவனம் செலுத்தி அதிக நல்ல செயற்கைகோள்களை உருவாக்க முடியும்Post a Comment

Previous Post Next Post