நாசாவின் புதிய எக்ஸோ பிளானட் சோதனை ஆய்வகம்

நாசாவின் பரிசோதனை மற்றும் ஆராய்ச்சி அமைப்பானது JPL எனப்படும். இந்த அமைப்பானது கலிபோர்னியா மாகாணத்தில் உள்ளது.

இந்த ஜேபிஎல் அமைப்பானது, புது புது பரிசோதனைகளையும் ஆய்வுக்கூடங்களில் உருவாக்கி வருகின்றன, அதேபோல் சில நாட்களுக்கு முன்பு நாசாவினால் உருவாக்கப்பட்ட ஒரு பரிசோதனைக் கூடம் தான் “hot Jupiter exoplanet atmosphere lab”

இதன் அர்த்தம் என்னவென்றால், நமது சூரியனை தாண்டி வேறு ஒரு சூரியனை சுற்றி வரும் வியாழன் கிரகம் போல் இருக்கும் ஒரு கிரகத்தை, அதன் வளிமண்டலம் எப்படி இருக்கும் என்று ஒரு ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்டதுதான், இந்த பரிசோதனை கூடம்.

உதாரணமாக வேறு ஒரு சூரியனை சுற்றி வரும், வியாழன் போன்ற கிரகம், அந்த சூரியனுக்கு மிக அருகில் இருந்தால் அதனை சூடான வியாழன் கிரகம் என்று கூறுவர் இதனையே “ஹாட் ஜுபிடர்” என்று அழைக்கிறார்கள்.

நமது சூரிய குடும்பத்தை பொறுத்த வரை அது போல எந்த ஒரு கிரகமும் கிடையாது.

அதாவது சூரியனுக்கு மிக அருகில் மிகவும் பெரிய கிரகம்,

ஆனால் வேறு சில சூரியனை சுற்றிவரும் பெரிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அந்த கிரகங்களின் வளிமண்டலம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை சோதனை மூலமாக அறிவதற்காக, இந்த சோதனை கூடம் அமைக்கப்பட்டது.

இந்த சோதனை கூடத்தில் ஹைட்ரஜன் மற்றும் 0.3 சதவீத கார்பன் மொனாக்ஸைடு ஆகியவற்றை ஒரு அதிக வெப்பநிலை கொண்ட “ஓவனில்” சுமார் 2000 ஃபாரன் ஹீட் அளவுக்கு அதாவது 1100 செல்சியஸ் அளவு வெப்பபடுத்தி உள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இதனுடன் அதுக சக்தி வாய்ந்த UV கதிர்வீச்சை யும் பாய்ச்சி உள்ளனர்.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் Astrophysical Journal என்ற கட்டுரைகளில் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் நாம் அயல் கிரகங்களின் உள்ள உயிரின வாழியல் பற்றி ஒரு சில உண்மைகளை தெரிந்து கொள்ளமுடியும் என்று இதன் இணை தலைவர்Mark Swain கூறினார்.

நினைத்ததை போலவே பல தகவல்கள் ஆராய்ச்சி முடிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது என்றும். இந்த தகவல்கள் வரும் காலத்தில் exoplanet ஆராய்ச்சிக்காக மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும்,
Mark Swain கூறியுள்ளார்.

Source

Post a Comment

Previous Post Next Post