NavIC vs GPS | Indian New Navigatinon System vs American GPS System | இந்திய மற்றும் அமெரிக்க ஜிபிஎஸ் ஒரு அலசல்

நாம் போன பதிவில் IRNSS செயற்க்கைகோள் பற்றி பார்த்திருப்போம். இப்போது நாம் அதனின் நடைமுறை பயன்பாடான ஜிபிஎஸ் பற்றி பார்ப்போம். நாம் நமது கைபேசிகளின் பெரும்பாளும் பயன்படுத்தப்படும் திசைகாட்டும் செயலியில் அமெரிக்காவினால் வின்ணில் ஏவப்பட்ட ஜிபிஎஸ் வகை செயற்கைகோள்களின் தரவுகளையோ பயன்படுத்துகிறோம்.

ஆனால் வரக்கூடிய இந்த ஆண்டிலேயே அதாவது 2019 லியே , நாம் நமது சொந்த ஜிபிஎஸ் பயன்பாடு செயற்க்கைகோளான IRNSS ஐ பயன்படுத்த ஆரம்பித்து விடுவோம் என இஸ்ரோ கூறுகிறது. இதற்க்காக வடிவமைக்க பட்ட ஒரு சிறப்பான கணிணி உபகரனத்தின் பெயர்தான். NavIC என்பது.

NavIC – NAVigation with Indian Constellation

ISRO

இதற்க்காக விண்ணில் செலுத்தப்பட்டுள்ள 7 செயற்கைகோள்களும் சுமாராக 1630 கிலோ கிராம் எடையுடையது , இவைஅனைத்தும் கிட்டதட்ட 20,460 கிலோமீட்டர் பூமியிலிருந்து உயரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. , இவைஅனைத்திற்கும் உள்ள கால நிலை 12 வருடங்கள் (MissionDuration). இறுதியாக இவைஅனைத்தும் GPS II F என்ற வகை அறிவியல் சாதனத்தினை கொண்டவை.

NavIC vs GPS Tamil Difference

நாம் நமது நேவிக் வகை கருவியில் மூலம் சாதாரனமாக பயன்படுத்தும் ஜிபிஎஸ் களைவிட ~10 மீட்டர் என்ற ஒரு அதிகபட்ச துள்ளிய தண்மையை தரமுடியும். மேலே உள்ள படத்தினை பாருங்கள். அது மட்டுமல்ல நமது இந்திய நேவிக் கருவியால் ராணுவப்பணிகளுக்கும். அது மட்டுமின்றி. ஆபத்து கால பேரிடர் மீட்பு பணியின் போதும் . இதனால் அதிக பட்ச துல்லியதண்மையான ~1மீட்டர் என்ற அளவுக்கு இதனை பயன்படுத்தி நாம் காரியங்களை சாதிக்க முடியும். ஆணால் இந்த அதிகபட்ச அளவானது ஜிபிஎஸ் களின் நம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. அதை மிகவும் பாதுகாப்பானதாக வைத்திருக்கிறார்கள்.

GPS Global 31 Sat. Rotating Earth in Orbit

இதுவரைக்கும் இந்த அளவு அதிக துள்ளிய தண்மையுடைய ஜிபிஎஸ் செயற்கைகோள்களை வெறும் 5 உலக நாடுகள் மட்டுமே அமெரிக்க, ஐரோப்பா, ரஷ்யா, சைனா, வின்ணில் செலுத்தியுள்ளனர். அதில் 5 ஆவது நாம்தான்.

பணிகள்

இதன் முக்கிய பணிகளின் முதலாவது தான் மீனவர்களுக்கு உதவுவது , நீங்கள் அனைவரும் அரிந்தது தான் . இந்தியா ஒரு மூன்றுபக்க கடல் சூழ்ந்த நாடு, எனவே இங்கு அதிகமாக மீன்பிடி தொழில் உள்ளது. எனவே மீனவர்களுக்கு கடலில் செல்லும் போது அவர்கள் வேறு நாட்டு கடல் பகுதிக்கு சென்றுவிடாமல் இருக்கவும். மற்றும் கரை திரும்பும் போது மிகவும் எளிமையான வழியை காட்டவும் இது பயன்படுத்தப்படுகிறது.

இரண்டாவது ரானுவப்பனிகள்

ஏதாவது போர்காலங்களில் இந்தியாவின் எதிரி நாட்டின் இலக்குகளை மிகவும் சரியாக தாக்கி அழிக்கவும். வீரர்கள் எங்கிருக்கிறார்கள் என அறிந்துகொள்ளவும் இது பயன் படுகிறது . இது போன்ற சூழ்நிலையில் தான் இது ~1 மீட்டர் என்ற அளவுக்கு துள்ளியத்தன்மையை தரும்.

மூன்றாவது பேரிடர் மீட்பு

வெள்ளம், புயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் வரும் வேலையில் உயிர் பிழைத்தவர்கள் எங்கிருக்கிறார்கள், அருகில் இருக்கும் மருத்துவ கூடாரங்கள் போன்றவற்றினை துல்லியமாக அடையாளம் காண பயன் படுகிறது. இது போன்ற சமயங்களிலும். இது ~1 மீட்டர் என்ற துள்ளிய தண்மையை கொடுக்க வல்லது தான் . இந்த நேவிக் என்ற இந்தியாவின் ஜிபிஎஸ் தொழில்நுட்பம்.

மொபைல்:

இந்தியா ஒரு அதிக மக்கள் தொகை இருக்கும் நாடு என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இப்போது. ஆளுக்கு 4 ஆன்ராய்டு மொபைல் வைத்து இருக்கிறார்கள். சொல்லமுடியாது மொபைல்கள் இந்திய மக்கள் தொகையைவிட அதிகமாக இருந்தாலும் இருக்கலாம்.

இதை கருத்தில் கொண்டு மொபைல் போன்களின் நேவிக் தொழில் நுட்பம் கொண்ட ஜிபிஎஸ் கருவிகளை வைப்பதற்கு இஸ்ரோ வின் SAC விண்வெளி பயன்பாட்டு நிறுவனமானது நமது இந்திய ஸ்மார்ட் போன் உற்பத்தியாளர்களுக்கு. கிட்டதட்ட 1 மில்லியன் நேவ்காம் என்ற கருவியை இஸ்ரோ வழங்கியுள்ளதாக SAC அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

இனிமேல் வரக்கூடிய காலங்களில் பொது மக்கள் போக்குவரத்து சாதனங்களான. பேருந்து , ரயிஸ் , மற்றும் கார்களிலும் இதனை உபயோகப்படுத்தி பயன்பெறும் காலம் வெகுதூரம் இல்லை. இந்த நேவ்காம் என்ற உள்வாங்கி உற்பத்திக்காக இஸ்ரோ தனது இனையதளத்தில் tender (ஒப்பந்தம்) ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதுமட்டும் இல்லாமல்.

நாம் இப்போது சாதரணமாக மொபைல் களின் பயன்படுத்தப்படும்.ஜிபிஎஸ் உபகரணங்களை நாம் ஒரு சில பிரத்யேகமான ஜேம்மர்கள் வைப்பதன் மூலம். ஜிபிஸ் இயந்திரம் நாம் எங்கிருக்கிறோம் என்பதை யாருக்கும் காட்டாமல் வைக்க முடியும். ஆனால் இந்தியாவின் இந்த நேவிக் வகை ஜிபிஎஸ் கருவியினை பயன்படுத்தும் போது . எந்த வகை ஜேம்மர் பயன்படுத்தினால் . இதனை ஊடுவி அலைவரிசையை தடுக்க இயலாது என இஸ்ரோ கூறியுள்ளது.

மேலும் நாம் விண்வெளி பற்றி வரும் பகுதிகளில் பார்க்கலாம், அதுக்கு நீங்கள் ஸ்பேஸ் நியூஸ் தமிழ் க்கு சப்ஸ்கிரைப் செய்யுங்கள். நன்றி

Post a Comment

Previous Post Next Post