இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது இஸ்ரோ | இரண்டு செயற்கைக்கோள்களை ஏற்றி பறந்தது பிஎஸ்எல்வி சி 44 வகை ராக்கெட்

2019 ஆம் ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்தது இஸ்ரோ.

January 24 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 11.30 மணி அளவில் பிஎஸ்எல்வி சி 44 ராக்கெட்டில் புதிய வகை வரவான DL வகை ராக்கெட் மூலம் இந்திய பாதுகாப்புத்துறையின் செயற்கைக்கோளான மைக்ரோ சாட் R, என்ற 740 கிலோ எடையுள்ள செயற்கை கோளையும் மற்றும் சிறுவர்கள் செய்த கலாம் சாட்டிலைட் என்ற சிறிய வகை 10 சென்டி மீட்டர் அளவுடைய செயற்கைக் கோளையும் விண்ணில் ஏவியது.

இந்தியாவின் பாதுகாப்பு வளர்ச்சி துறையான drdo ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இமேஜிங் imageing செயற்கைக்கோள். Microsat R. இது பூமியில் இருந்து 277.2 km உயரத்தில் நிலை நிறுத்தப்பட்டது.

முதன் முதலாக ஒரு பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஒரு செயற்கைக்கோள் 277 கிலோமீட்டர் என்ற மிக குறைந்த உயரத்தில் நிலைநிறுத்தப்படுவது இதுவே முதல் முறை என்று இஸ்ரோ தலைவர் கே சிவன் கூறினார், அதுமட்டுமில்லாமல் அவர் கூறுகையில் கலாம் செயற்கைக்கோள் ஐ வடிவமைத்த சிறுவர்களுக்கும் அவர் பாராட்டுகளை தெரிவித்தார்.

முதன்முதலாக 277 கிலோ மீட்டர் உயரத்தில் தனது முக்கிய 740 கிலோ எடை உடைய மைக்ரோசாட் R, என்ற செயற்கைகோளை நிலை நிறுத்திய பின்னர், திரும்பவும் அது உயிரூட்டப்பட்டு மீண்டும் 450 கிலோ மீட்டர் உயரத்திற்கு சென்று அங்கிருந்த சிறிய வகை கலாம் செயற்கைக்கோளை அது விண்ணில் நிறுவியது.

Post a Comment

Previous Post Next Post