வியாழன் கிரகத்தின் முதல் ஆய்வு முடிவு மற்றும் ஆச்சரியமான தகவல்கள்

போன வாரம் , நடந்த யுரோப்பிய  புவியறிவியல் சங்கத்தின் வருடாந்திர கூட்டத்தில் (Annual  European Geosciences Union)ல் உள்ள உறுப்பினர்களால் முதல் முதலில் “ஜுனோ ” ( Juno spacecraft ) ஆய்வு முடிவுகள் குறித்து பேசப்பட்டன.
அதில் இதுவரை நாம் கற்பனை செய்திடாத அளவுக்கு அதன் உள் கட்டமைபு இருப்பதாக நமக்கு தெரியவருகிறது..
இதனைப்பற்றி கூறிய ஜூனோவின் பனி முதன்மை விசாரனையாளர்
ஸ்காட் போல்டன் இது பற்றி கூறுகையில்

“நம் மாதிரிகள் எதிர்பார்த்ததை விட ஜுபிடர் முழுவதும் உள்ளே வேலை செய்கிறது”

“The whole inside of Jupiter is just working differently than our models expected,” said mission principal investigator Scott Bolton of the Southwest Research Institute in Taxas

அம்மோனியா:

வியாழன் கிரகத்தில் உள்ள மேகங்கள் அம்மோனியாவா ஆனவை என நாம் முன்னவே அறிந்தது தான். ஆனால் இப்போதைய தரவுகளின் அடிப்படையில்.  வியாழன் கிரகத்தின் மத்திய ரேகை பகுதிகளில் நாம் எதிர்ப்பார்த்ததை விட அளவுக்கு அதிகமான அம்மோனியா அடர்ந்து கானப்படுவது மிகுந்த ஆச்சரியத்தினை அளிப்பதாக கூறியுள்ளனர்..
அடர்ந்து கானப்படும் அம்மோனியாவனது 300 கி.மீ அளவுக்கு கீழே செல்வதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன
மேலும் ஒரு சில இடங்களில் அம்மோனியா அளவு குறைந்தும் காணப்படுகிறது

காந்த புலம்:

வியாழனின் காந்த புலமானது நாம் எதிர்பார்த்தை விட மிகவும் வலிமைவாய்ந்ததாகவும், மிகவும் ஒழுங்கற்ற தன்மையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது… இதற்கு வியாழன் கிரகத்தில் உலோக  ஹைட்ரஜன் அடுக்கு இருக்கலாம் என கருத்து எழுந்துள்ளது..

இதற்கு கருத்து தெரிவிக்கையில் நாசாவை சார்ந்த ஜாக் கன்னர்னி என்பவர்,  வியாழன் கிரகத்தின் காந்த அளவானது நாம் எதிர்பார்த்தை விட அதிகம் இருக்கலாம் என்றும் அது 8-9 காஸ் (Gauss) காஸ் என்பது காந்த புலத்தினை அளவிட பயன்படும் ஒரு அலகு.
[பூமியின் காந்த புலமானது  (0.25 to 0.65 gauss).காஸ் ஆகும்.  வியாழனில் காந்த புலம் 5 காஸ் (Gauss ) இருக்கலாம் என கருத்து நிலவியது. ஆனால் இப்போது ஜுனோவின் தரவுகளால் அது 8-9 வரை இருக்கலாம் என கருதப்படுகிறது…][அம்மோனியா பற்றிய ஒரு சில கருத்துகளை தவிர்த்து இருக்கிறேன் அதை பற்றி படிக்க Link]

Post a Comment

Previous Post Next Post